ரன்பீர் கபூர் - ஆலியா பட் திருமணம் - கொண்டாட்டத்தில் பாலிவுட் ரசிகர்கள்

alia bhatt and ranbir kapoor

பட மூலாதாரம், ANI

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இந்தியாவின் பிரபல சினிமா கலைஞர்களான நடிகை ஆலியா ப6ட் மற்றும் நடிகர் ரன்பீர் கபூர் இன்று திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

உலகளவில் பல கோடி ரசிகர்களை கொண்ட பாலிவுட்டின் பிரபலமான முகங்களான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வருகின்றனர்.

ரன்பீர் மற்றும் ஆலியா

பட மூலாதாரம், HYPE PR CREDIT

அவ்வப்போது இவர்களின் திருமணம் குறித்த செய்தி வந்தாலும் அது ஏதும் உறுதி செய்யப்பட்ட தகவலாக இருக்காது.

இந்நிலையில் ரன்பீர் கபூரின் அம்மாவும் பிரபல பாலிவுட் நடிகருமான நீத்து சிங் புதன்கிழமையன்று ஏப்ரல் 14-ம் தேதி இவர்களின் திருமணம் குறித்து உறுதிப்படுத்தினார்.

ரன்பீர் மற்றும் ஆலியா

பட மூலாதாரம், HYPE PR CREDIT

இந்நிலையில் இவர்களது திருமணம் இன்று மாலை மும்பையில் உள்ள கபூர் குடும்பத்தினரின் வீட்டில் நடந்தது.

50 பேர் மட்டும் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளனர். இந்தியாவில் இவர்களது திருமணம் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளன.

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகிய இருவரும் சேர்ந்து நடித்த முதல் படம் பிரமாஸ்திரா. அது இன்னும் வெளியாகவில்லை.

ரன்பீர் மற்றும் ஆலியா

பட மூலாதாரம், HYPE PR CREDIT

யார் இந்த ஆலியா பட்?

ஆலியா பட்

பட மூலாதாரம், Getty Images

புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோஹரின் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான ஸ்டூடண்ட் நம்பர் ஒன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆலியா பட். அதற்கு முன்பு குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் தோன்றியுள்ளார்.

அதன்பின் அவர் நடித்த ஹைவே, கல்லி பாய், டியர் ஜிந்தகி போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பாராட்டுக்களை பெற்றார்.

ஆலியா பட், 2 ஸ்டேட்டஸ் எனும் படத்தில் அர்ஜுன் கபூருடன் இணைந்து நடித்தார். அந்த படத்தில் அவர் தமிழ் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஆலியா பட் நடித்து வெளியான கங்குபாய் காத்தியாவாடி பெரிதும் பேசப்பட்டது.

இதில் ஆலியா கங்குபாய் கதாபாத்திரத்திற்கு பொருந்துவாரா என கேள்விகள் எழுந்திருந்த நிலையில் படம் வெளியான பிறகு அவரின் நடிப்பை பலரும் பாராட்டினர்.

இந்தியாவிலேயே மிகப்பெரிய பொருட்செலவில் வெளியானதாக கூறப்படும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. ராஜமௌலி இயக்கிய இந்த படத்தின் மூலம் இந்திய அளவில் பல்வேறு மொழி ரசிகர்களுக்கும் ஆலியா பட் அறிமுகமானார்.

ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட் ஒரு பிரபலமான பாலிவுட் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த ரன்பீர் கபூர்?

ரன்பீர் கபூர்

பட மூலாதாரம், Getty Images

பாலிவுட்டின் டாப் ஹீரோக்களின் பட்டியலில் ரன்பீருக்கு முன்னணி இடம் உண்டு.

இவர் நடித்த பல படங்கள் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தவை.

புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர் இம்தியாஸ் அலி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்த ராக்ஸ்டார், தீபிகா படுகோனுடன் இணைந்து நடித்த ஏ ஜவானி ஏ திவானி மற்றும் தமாஷா.

சஞ்சய் தத்தின் வாழ்க்கைப் படமான சஞ்சு, பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து நடித்த பர்ஃபி போன்ற படங்கள் பெரிதும் பேசப்பட்டவை.

அனுராக் காஷ்யாப் இயக்கத்தில் பாம்பே வெல்வட் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இவரின் தந்தை ரஷி கபூர் பழம் பெரும் பாலிவுட் நடிகராவார். தாய் நீத்து கபூரும் புகழ்பெற்ற நடிகை.

பாலிவுட்டில் பிரபல கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகள் திருமணம் செய்து கொள்வது வழக்கமானதே.

சமீப மாதங்களில் விக்கி கவுஷால் மற்றும் கத்ரீனா கைஃப் திருமணம் செய்து கொண்டனர்.

முன்னதாக ரன்வீர் சிங், தீபிகா படுகோனே திருமணம் செய்துகொண்டனர்.

தற்போது பாலிவுட் மிகப்பெரும் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் திருமண செய்தி பாலிவுட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: