You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜோதிகா, தனுஷ், அஜித்துக்கு தாதா சாகேப் பால்கே தென்னிந்திய விருது
தனுஷ், அஜித் ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகின் சிறந்த, திறமையான கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில், 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், தமிழ் சினிமா பிரிவில் சிறந்த படத்துக்கான விருது 'டூ லெட்' படத்துக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது தனுஷுக்கு வழங்கப்படுகிறது.
அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தனுஷ் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோல், பன்முகத்தன்மை வாய்ந்த நடிப்பாற்றலுக்காக அஜித் குமாருக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது.
தமிழ் சினிமா விருதுகள் - விவரம்
பன்முகத்தன்மை வாய்ந்த நடிகர் -அஜித்குமார்
சிறந்த நடிகர் - தனுஷ் (அசுரன்)
சிறந்த நடிகை - ஜோதிகா (ராட்சசி)
சிறந்த இயக்குனர் - ஆர்.பார்த்திபன் (ஒத்தசெருப்பு சைஸ் 7)
சிறந்த படம் - டூ லெட்
சிறந்த இசையமைப்பாளர் - அனிருத்
இயக்குநர் பாலாவின் 'விசித்திரன்' பட டீசரை வெளியிட்ட சூர்யா!
இயக்குநர் பாலா தயாரித்துள்ள 'விசித்திரன்' பட டீசரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா
'ஜோசப்' படத்தை இயக்கிய பத்மகுமாரே அதன் தமிழ் ரீமேக்கான விசித்திரனையும் இயக்கி உள்ளார்
மலையாளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற திரைப்படம் 'ஜோசப்'.
தற்போது இந்தப்படம் தமிழில் 'விசித்திரன்' என்ற பெயரில் ரீமேக்காகி உள்ளது. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் பாலா தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். 'ஜோசப்' படத்தை இயக்கிய பத்மகுமாரே அதன் தமிழ் ரீமேக்கான விசித்திரனையும் இயக்கி உள்ளார்.
இப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஹீரோயினாக பூர்ணா, மது ஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 23-ம் தேதி விசித்திரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்நிலையில் தற்போது படத்தின் டீசரை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் நடிகர் சூர்யா.
'அந்தாதூன்' தமிழ் ரீமேக் 'அந்தகன்': போஸ்டர் வெளியீடு!
2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை செய்திருந்தது 'அந்தாதூன்' திரைப்படம்.
இந்தப் படத்தில் ஆயூஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை 'பொன்மகள் வந்தாள்' பட இயக்குநர் ஜே.ஜே ஃப்ரெட்ரிக் இயக்க, நடிகர் பிரஷாந்த் நடிக்கிறார். தபு கேரக்டரில் நடிகை சிம்ரன் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்நிலையில், அந்தாதூன் தமிழ் ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டது.படத்திற்கு 'அந்தகன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மாரி செல்வராஜுடன் இணையும் துருவ் விக்ரம்
தனுஷ், ராஜிஷா விஜயன், லால், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கர்ணன்'. தாணு தயாரித்து வரும் இந்தப் படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.
இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதற்கு இருவருமே மறுப்பு தெரிவிக்காமல் இருந்ததால், இந்தக் கூட்டணி இணைவது உறுதிப்படுத்தப்பட்டது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார் துருவ் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் படத்தில் பிரியா பவானிசங்கர்
ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக 'ருத்ரன்' படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு 'ருத்ரன்' என்று வெளியானது. ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தினை பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா படங்களைத் தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார் என்பதோடு இப்படத்தின் இயக்குநராகவும் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ராகவா லாரன்ஸ் ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'மேயாத மான்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பிரியா பவானிசங்கர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா உள்ளிட்ட பங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2, குருதி ஆட்டம், சிம்புவின் பத்து தல உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதி மகள் நடிப்பில் உருவாகியுள்ள வெப் ஃபிலிமின் ட்ரைலர்!
விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா நடிப்பில் உருவாகியுள்ள 'முகிழ்' என்ற ஒரு மணி நேர வெப் ஃபிலிமின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதி புரொடெக்ஷன்ஸ், கார்த்திக் இயக்கத்தில், விஜய் சேதுபதி, ரெஜினா, ஸ்ரீஜா விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் இந்த வெப் ஃபிலிம் உருவாகி உள்ளது.
தயாரிப்பாளர் ரவீந்திரன் மீண்டும் நேற்று (டிசம்பர் 31) தமிழகமெங்கும் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை வெளியிட்டுள்ளார். சுமார் 70-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் ரசிகர்கள் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தைக் கொண்டாடும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டன.
இந்தநிலையில், செல்வராகவன் ஆயிரத்தில் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்த செல்வராகவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'இது வரை கேட்டிருந்த, காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்கு இதோ உங்கள் முன்னால்' என்று குறிப்பிட்டுள்ளார்.
செல்வராகவனின் ட்வீட்டைப் பகிர்ந்துள்ள தனுஷ், 'முன் தயாரிப்புக்கான பணிக்கு மட்டும் ஒருவருடம் தேவைப்படும். ஆனால், இது செல்வராகவனின் கனவு படம். 2024-ல் இளவரசன் திரும்புகிறான்' என்று குறிப்பிட்டுள்ளார்.
படத்துக்கான போஸ்டரும் வெளியிட்டுள்ளனர். படத்தில் தனுஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது. தயாரிப்பு, இசை மற்ற நடிகர்கள் குறித்த எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. படம் 2024-ல் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
பிற செய்திகள்:
- மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் தகராறு செய்த பெண்: திமுக - அதிமுக போட்டி போராட்டங்கள்
- ஆன்லைன் லோன் ஆப் மோசடி: 2 சீனர்கள் உள்பட 4 பேர் சென்னையில் கைது
- இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மருத்துவமனையில் சேர்ப்பு
- கோவிஷீல்டு தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த பரிந்துரை
- "பாஜக அதிமுகவிற்கு நண்பேன்டா" - மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்