அமெரிக்காவில் டிரம்பை தாக்க மீண்டும் முயற்சி - துப்பாக்கியால் சுட்டது யார்?
அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், தற்போதைய அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதல் நடத்த மீண்டும் முயற்சி நடந்துள்ளது. புளோரிடாவில் உள்ள அவரது கோல்ப் மைதானத்தில் நடந்த தாக்குதல் முயற்சியில் இருந்து தப்பி அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
புதரில் மறைந்திருந்தபடி டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அமெரிக்க ரகசிய சேவைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நேரத்தில் டிரம்ப் சுமார் 275 முதல் 455 மீட்டர் தொலைவில் இருந்ததாக எஃப்.பி.ஐ. கூறுகிறது.
ஏகே-47 துப்பாக்கி, ஸ்கோப், கோ-புரோ கேமரா மற்றும் 2 பைகள் அந்த இடத்தில் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த தாக்குதல் அமெரிக்க ரகசிய சேவைப்பிரிவு மேலும் என்ன கூறியது, ட்ரம்பை எதிர்த்து போட்டியிடும் கமலா ஹாரிஸ் என்ன கூறினார் என்பதை அறிந்துக் கொள்ள முழு காணொளியை பார்க்கவும்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



