அண்ணாமலை செய்தது சரியா? பாஜக இன்றி அதிமுக-வால் தேர்தலை சந்திக்க முடியுமா?
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்து காரணமாக அதிமுக பாஜக இடையே கடந்த காலங்களில் பல்வேறு மோதல்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது அதில் உச்சக்கட்டமாக அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியிருக்கிறார்.
பாஜக மேலிடம் சொல்லியே அண்ணாமலை பேசி வருவதாகவும் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அண்ணாமலை விமர்சித்த போது அவருக்கு எதிராக தீர்மானம் மட்டுமே நிறைவேற்றிய அதிமுக, இம்முறை பாஜக தங்கள் கூட்டணியிலேயே இல்லை என்று கூறியிருப்பதற்கு காரணம் என்ன?
பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை பதவியேற்ற பின்னர் அதிமுக உடனான அக்கட்சியின் அணுகுமுறை மாறத்தொடங்கியது. அதிமுக உடன் கூட்டணியில் இருந்தாலும் தங்கள் கட்சியை தமிழ்நாட்டில் வளர்க்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று அண்ணாமலை தொடர்ந்து கூறுகிறார். அதேநேரம் அவர் பேசும் கருத்துகள் பல நேரங்களில் கூட்டணிக்குள் நெருடலை ஏற்படுத்தி விடுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



