BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

பட மூலாதாரம், OCEAN GATE
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்.
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.
எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம்.
நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும். பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அந்த வகையில் இந்த வாரம், டைட்டன் நீர்மூழ்கியின் மீட்கப்பட்ட பாகங்கள் விபத்தின் மர்மத்தை கண்டுபிடிப்பதில் எப்படி உதவும்?, பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் இந்துக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?, தக்காளிக்கு இந்தியாவில் ஏன் இவ்வளவு மரியாதை? - 'மாண்புமிகு' பழத்தின் வரலாறு, சாண்டோ சின்னப்பா தேவர்: தமிழ் சினிமாவில் விலங்குகளை வெற்றிபெற வைத்த சாதனையாளர், "ஐ.பி.எல் போதும், ரஞ்சி எதற்கு?" - சர்ஃபராஸ் கானுக்கு ஆதரவாக கேள்வி எழுப்பும் முன்னாள் வீரர்கள் ஆகிய ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
டைட்டன் நீர்மூழ்கியின் மீட்கப்பட்ட பாகங்கள் விபத்தின் மர்மத்தை கண்டுபிடிப்பதில் எப்படி உதவும்?
அட்லான்டிக் கடலோரத்தில் எஞ்சிக் கிடக்கும் டைட்டன் நீர்மூழ்கியின் சிதைந்த எச்சங்களிலிருந்து சேகரிக்க முடிந்த அனைத்து குப்பைகளையும், ’ஹொரைசான் ஆர்க்டிக்’ (Horizon Arctic) என்ற மீட்பு கப்பல் சேகரித்துள்ளது. இது 11 நாட்களுக்கு முன்பு, 5 பேருடன் வெடித்துச் சிதறிய டைட்டன் கப்பலின் பேரழிவுக்கான காரணத்தை ஆய்வு செய்து வரும், புலனாய்வாளர்களுக்கு உதவியாக இருக்கும். முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் இந்துக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?

பட மூலாதாரம், Getty Images
மத்தியப் பிரதேசம் போபாலில் செவ்வாய் அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, ஒரு சில அரசியல் கட்சிகள் பொது சிவில் சட்டத்தைக் காரணம் காட்டி இஸ்லாமியர்களை தூண்டிவிடுவதாக குற்றம் சாட்டினார். இந்திய தேர்தல் அரசியலில், பொது சிவில் சட்டம் என்பது மதக்கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது. முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
தக்காளிக்கு இந்தியாவில் ஏன் இவ்வளவு மரியாதை? - 'மாண்புமிகு' பழத்தின் வரலாறு
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து காணப்பட்டது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கும் மேல் விற்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை கடைகளில் கொள்முதல் விலைக்கே விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரூ.60க்கு தக்காளி விற்கப்பட்டது. நம் உணவுப் பழக்கத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ள தக்காளி, நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியது எப்படி தெரியுமா? முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
சாண்டோ சின்னப்பா தேவர்: தமிழ் சினிமாவில் விலங்குகளை வெற்றிபெற வைத்த சாதனையாளர்
நான்கு முழ வேட்டியும், மேல்சட்டை அணியா வெற்று உடம்புமாக, அரைகுறை ஆங்கிலத்தோடும், அடித்து வீசும் வார்த்தைகளோடும் எத்தனையோ நடிகர்களையும் கையாண்டவர். மருதமலை முருகன், எம்.ஜி.ஆர், விலங்குகள் - இவை மூன்றும்தான் திரையுலகில் அவரது முதலீடு. யாரும் எளிதில் நெருங்கிப் பழகிட முடியாத எம்.ஜி.ஆர்., விடாமல் இறுதிவரை பாராட்டிய ஆச்சர்யத்துக்குரிய நட்புக்குச் சொந்தக்காரர் சாண்டோ சின்னப்பா தேவர். முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
"ஐ.பி.எல் போதும், ரஞ்சி எதற்கு?" - சர்ஃபராஸ் கானுக்கு ஆதரவாக கேள்வி எழுப்பும் முன்னாள் வீரர்கள்

பட மூலாதாரம், Getty Images
கடந்த 3 ரஞ்சி சீசன்களிலும் அதிக ரன் குவித்த வீரர், பிராட் மேனுக்கு அடுத்தபடியாக முதல் தர போட்டிகளில் அதிகமான ரன் சராசரி கொண்ட வீரர் போன்ற பெருமைகளை தன் வசம் வைத்திருக்கும் சர்ஃப்ராஸ் கானுக்கு இந்திய டெஸ்ட் அணியில் இன்னும் வாய்ப்பு கிடைக்காதது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. மும்பையைச் சேர்ந்த வலது கை பேட்ஸ்மேனான 25 வயது சர்ஃபராஸ் கான் உள்நாட்டுப் போட்டிகளில் 79.65 ரன்களை சராசரியாக வைத்துள்ளார்.முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




























