பிரிட்டன் சாலையில் திடீரென தறிகெட்டு ஓடிய ராணுவ குதிரைகள் - என்ன நடந்தது?
இந்தக் காணொளியில் சங்கடம் தரும் காட்சிகள் உள்ளன. ஏப்ரல் 24ஆம் தேதி, லண்டன் வீதிகளில் 5 ராணுவக் குதிரைகள் கட்டுப்பாடின்றி ஓடின. பக்கிங்ஹாம் அரண்மனை அருகே இந்தச் சம்பவம் தொடங்கியது.
கட்டுமான தளத்தில் எழுந்த இரைச்சல், குதிரைகளை தறிகெட்டு ஓட வைத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஒரு குதிரையின் உடலில் ரத்தம் காணப்பட்டது.
அக்குதிரை, நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலாப் பேருந்தின் மீது மோதி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதில் குறைந்தது 4 பேர் காயமடைந்தனர். ஐந்து குதிரைகளில் 2 குதிரைகள் சுமார் 8 கிமீ தூரத்திற்கு லண்டன் வீதிகளில் ஓடின.
''சில ராணுவ குதிரைகள் வழக்கமான காலை பயிற்சியின்போது கட்டுப்பாட்டை இழந்து ஓடின," என்று பிரிட்டிஷ் ராணுவம் கூறியது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



