காணொளி: இந்தியா - சீன வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

காணொளி: இந்தியா - சீன வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
பிரசுரிக்கப்பட்டது

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் இன்று (ஆகஸ்ட் 19) இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு பேசிய ஜெய்சங்கர், "நமது உறவில் கடினமான காலகட்டத்தை நாம் பார்த்துள்ளோம். தற்போது அதை கடந்து அடுத்த கட்டத்துக்கு செல்ல இருநாடுகளும் விரும்புகின்றன. இதற்கு இரண்டு பக்கங்களில் இருந்தும் நேர்மையான மற்றும் பயனுள்ள ஒரு அணுகுமுறை தேவை. அந்த அணுகுமுறை, இரண்டு நாடுகளுக்கும் இடையேயான மரியாதை, புரிதல் மற்றும் நலன் ஆகியவற்றால் வழிகாட்டப்பட வேண்டும். கருத்து வேறுபாடுகள் பிரச்னையாகவோ, போட்டியாகவோ அல்லது மோதலாகவோ மாறக்கூடாது." என்றார்

தொடர்ந்து பேசிய வாங் யீ, "தலையிடுதலை தவிர்த்து ஒத்துழைப்பை அதிகப்படுத்தவும் வளர்ச்சிக்கான இந்த தருணைத்தை ஒருங்கிணைத்து இந்தியா சீனா இடையேயான உறவை மேம்படுத்தவும் நாம் போதுமான நம்பிக்கையை காண்பித்துள்ளோம். அதனால், இருநாட்டு உறவுக்கு புத்துயிர் அளித்து இருநாட்டு வெற்றிக்கு பங்களிக்க முடியும். அதன்மூலம், ஆசியா மற்றும் உலகத்துக்கு மிகவும் தேவையாக உள்ள உறுதியும் நிலைத்தன்மையும் கிடைக்கும்." எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு