காணொளி: காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் மீது தாக்குதல்

காணொளி: காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் மீது தாக்குதல்
பிரசுரிக்கப்பட்டது

ராஜஸ்தானில் காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே சிலரால் தாக்கப்பட்டுள்ளார்.

திங்கள் கிழமை ஜெய்ப்பூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது ஆதரவாளர்கள் அவரை தோளில் தூக்கிச் சென்ற போது இந்த தாக்குதல் நடந்தது. இதுதொடர்பாக இரண்டு இளைஞர்களை காவலில் எடுத்து, விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்ததாக பிடிஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக அபிஜித் தீப்கே குற்றம்சாட்டியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு