You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருச்சி விமானம் இரண்டரை மணி நேரம் வட்டமடித்தது ஏன்? சக்கரம் உள்ளே செல்லாவிட்டால் என்ன நடக்கும்?
தமிழ்நாட்டின் திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வானத்திலேயே சுமார் இரண்டரை மணி நேரம் வட்டமடிக்க நேரிட்டது. நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு, 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களும் தீயணைப்பு வண்டிகளும் நிறுத்தப்பட விமான நிலையத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
வானத்தில் நீண்ட நேரம் வட்டமடித்த விமானம், பிறகு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பிறகு பாதுகாப்பாக தரையிறங்கியது. இதன் பிறகே விமானத்தில் இருந்த பயணிகளும், விமான நிலையத்தில் கூடியிருந்த அவர்களின் உறவினர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்திற்கு என்ன நேரிட்டது? விமானம் வானத்திலேயே 2 மணி நேரத்திற்கும் மேலாக வட்டமடித்தது ஏன்?
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மாலை 5.44 மணியளவில் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஷார்ஜாவுக்கு புறப்பட்டது. விமானத்தல் 140-க்கும் அதிகமானோர் இருந்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
விமானம் மேலே புறப்பட்ட பிறகு விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி விமானத்தை மீண்டும் திருச்சியிலேயே தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, திருச்சி விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டன. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மேற்கொண்டனர்.
சிறிது நேரத்திலேயே விமான நிலையத்தில் 18 ஆம்புலன்ஸ்களும், தீயணைப்பு வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் உதவுவதற்கு வசதியாக மருத்துவர்கள் குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
அதேநேரத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் தரையிறங்குவதற்கு முன்பாக அதில் இருந்த எரிபொருளை குறைக்கும் பொருட்டு, வானத்திலேயே விமானம் வட்டமடிக்கத் தொடங்கியது. ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலே திருச்சி விமான நிலையப் பகுதியில் அந்த விமானம் வானில் வட்டமடித்தது.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, அன்னவாசல் முக்கணமலைப்பட்டி, கீரனூர், அம்மாசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் விமானம் வானில் நீண்ட நேரம் வட்டமடித்ததை பொதுமக்கள் அச்சத்துடன் நோக்கினர்.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்த விமானத்தை 8.15 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்க தீர்மானிக்கப்பட்டது. அந்த திட்டடப்படியே, விமானம் சரியாக 8.10 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை மீண்டும் நெருங்கியது. மெல்லமெல்ல உயரத்தை குறைத்த அந்த விமானம் சரியாக 8.15 மணிக்கு திட்டமிட்டபடி ஓடுபாதையைத் தொட்டது. அதன் சக்கரங்கள் ஓடுபாதையை உரசியபடி பாதுகாப்பாக விமானம் தரையிறங்கியது. இதனால், திருச்சி விமான நிலையத்தில் சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்த பரபரப்பும் பதற்றமும் தணிந்தது.
இதுகுறித்து விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமான போக்குவரத்துத் துறை ஆணையம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. விமானத்தின் லேன்டிங் கியர் வழக்கம் போல் சரியாக இயங்கியது. இதனால், விமானம் எந்த சிக்கலும் இல்லாமல் இயல்பான முறையில் தரையிறக்கப்பட்டது. அதற்கு முன்னதாக விமான நிலையம் முழுவதும் முழுமையான தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது." என்று கூறப்பட்டிருப்பதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறியுள்ளது.

மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)