காணொளி: ஏன் விஜய் களத்தில் நிற்கவில்லை? - ஆ. ராசா கேள்வி

காணொளிக் குறிப்பு, ஏன் விஜய் களத்தில் நிற்கவில்லை? - ஆ. ராசா கேள்வி
காணொளி: ஏன் விஜய் களத்தில் நிற்கவில்லை? - ஆ. ராசா கேள்வி
பிரசுரிக்கப்பட்டது

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் ஏன் களத்தில் நிற்கவில்லை என, திமுக எம்.பி. ஆ. ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய், கடந்த சனிக்கிழயமைன்று (செப்டெம்பர் 27) பரப்புரை மேற்கொண்டார். அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் சிக்கிக் கொண்டனர். அதில், 41 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் அறுபதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் என். ஆனந்த் உள்பட தவெக நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மதியழகன் நேற்றைய தினம் (29/09/2025) கைது செய்யப்பட்டுவிட்டார்.

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையமும் விசாரணையை தொடங்கியுள்ளது. பரப்புரைக் கூட்டம் நடைபெற்ற இடம், கரூர் அரசு மருத்துவமனை, உயிரிழந்தவர்களின் வீடுகள் ஆகியவற்றுக்குச் சென்று அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தியுள்ளார்.

அதேநேரத்தில், சி.பி.ஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தவெக தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.

விஜய் பரப்புரை செய்ய தடை விதிக்குமாறு கோரியும் ஒரு தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, விஜய் ஏன் களத்தில் நிற்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.