ஷி ஜின்பிங் சர்வாதிகாரி எனக் கூறிய ஜோ பைடன்: இதன் விளைவுகள் என்ன?
சீன அதிபர் ஷி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சர்வாதிகாரி என்று அழைத்துள்ளார். அமெரிக்காவில் இரு தலைவர்களின் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர் சநதிப்பில் இதனை தெரிவித்தார்.
ஒரு ஆண்டுக்கு பிறகு இரு நாட்டு தலைவர்களும் சந்திக்கின்றனர். இஸ்ரேல்-காஸா போர், ரஷ்யா-உக்ரைன் போர் உட்பட பல்வேறு விசயங்கள் பேசியதாக ஜோ பைடன் தெரிவித்தார்.
இருவரும் சில விசயங்களில் ஒத்து போகவில்லை என்றாலும் தங்களின் சந்திப்பு வெளிப்படையாகவே இருக்கும் என்றார்.

பட மூலாதாரம், Getty Images
சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் சந்திப்பு குறித்து பேசினார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். பத்திரிகையாளர் சந்திப்பு முடித்து வெளியேறும் போது, அவரிடம் ஒரு நிருபர், ஷி ஜின்பிங்கை இப்போதும் சர்வாதிகாரி என்று தான் கூறுகிறீர்களா என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த பைடன், ஆம் என்றார். ஒரு நாட்டின் தலைவராக இருக்கிறார், அது கம்யூனிச நாடு, நமது நாட்டின் செயல்பாடுகளிலிருந்து மிகவும் வேறுபட்டதாகும் என்றார்.
அவர் ஏற்கெனவே ஒரு முறை ஷி ஜின்பிங்கை சர்வாதிகாரி என்று குறிப்பிட்டுள்ளார். அதை சீன அதிகாரிகளை கோபமூட்டியது. தற்போது அதே கருத்தை அவர் மீண்டும் கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



