உத்தரபிரதேசம்: சம்பல் வன்முறையில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தின் நிலை என்ன?

காணொளிக் குறிப்பு,
உத்தரபிரதேசம்: சம்பல் வன்முறையில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தின் நிலை என்ன?
பிரசுரிக்கப்பட்டது

மேற்கு உத்தரபிரதேசத்தில் சம்பல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஷாஹி ஜாமா மசூதிக்கு வெளியே பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மசூதியின் முகப்பில் ஆங்காங்கே கற்கள் சிதறிக் கிடக்கின்றன. சாலையில் எரிந்த நிலையில் இருக்கும் வாகனங்கள் அகற்றப்பட்டாலும் அவற்றின் தடயங்கள் இன்னும் உள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலை மசூதியில் நீதிமன்ற உத்தரவுப்படி நடந்த ஆய்வுப் பணிகளின் போது காவல் துறையினருக்கும் ஒரு கும்பலுக்கு இடையே நடந்த மோதலில் இதுவரை குறைந்தது நான்கு பேர் இறந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இருபதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பிலால், நயீம், கைஃப் மற்றும் அயான் (16 வயது) ஆகியோர் இறந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர்களின் குடும்பத்தினரின் நிலை என்ன?

முழு விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)