காணொளி: மூளை அறுவை சிகிச்சையின் போது க்ளாரினெட் இசைக்கருவி வாசித்த பெண்

காணொளிக் குறிப்பு, அறுவை சிகிச்சையின்போது இசைக்கருவி வாசித்த பெண்
காணொளி: மூளை அறுவை சிகிச்சையின் போது க்ளாரினெட் இசைக்கருவி வாசித்த பெண்
பிரசுரிக்கப்பட்டது

பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட டெனிஸ் பேகன் மூளை அறுவை சிகிச்சையின்போது க்ளாரினெட் இசை கருவியை வாசித்தார். லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

டெனிஸ் பேகன், நோய் அறிகுறிகளை குறைப்பதற்காக டீப் ப்ரெய்ன் சிமுலேஷன் என்கிற சிகிச்சையை எடுத்துக் கொண்டார்.

பார்கின்சன் நோய், இசைக் கருவி வாசிப்பதற்கான அவரின் திறனை பாதித்துள்ளது. அறுவை சிகிச்சையின்போது அவரின் விரல்கள் 'சிறப்பாகவும், வேகமாகவும் நகர்வதை அவரால் பார்க்கவும் உணரவும் முடிந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு