காணொளி: காதலன் காருக்கு 3,400 ’முத்தம்’ கொடுத்த காதலி - ரூ.5,500 அபராதம் விதித்த போலீஸ்
காணொளி: காதலன் காருக்கு 3,400 ’முத்தம்’ கொடுத்த காதலி - ரூ.5,500 அபராதம் விதித்த போலீஸ்
பிரசுரிக்கப்பட்டது
மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவர் தனது காதலர் ஆதித்தியா என்பவரின் காரில் 3,400 முறை முத்தங்கள் இட்டு அலங்கரித்துள்ளார்.
முத்த குறியீடுகளோடு இருந்த அந்த காரை, அந்த பெண்ணின் காதலர் 2 நாட்களாக குவாலியர் நகரத்தில் ஒட்டி வந்த நிலையில் காவல்துறையினர் வாகனத்தை மாற்றியமைக்காக ரூ.5,500 அபராதமும் விதித்து அந்த முத்தக் குறியீடுகளை அழிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறும்போது, காரின் உரிமையாளர் மோட்டார் வாகன சட்டத்தை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
காரின் உரிமையாளர் ஆதித்யா கூறும்போது, தனது காதலி 3400 முறை காரின் மீது லிப்ஸ்டிக் உடன் முத்தம் அளித்ததாகவும் இதற்கு மூன்றரை மணி நேரம் ஆனதாகவும் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



