தங்கத்தை தேடி அலைந்த ஆஸ்திரேலியருக்கு அடித்த ஜாக்பாட் - என்ன கிடைத்தது தெரியுமா?

தங்கத்தை தேடி அலைந்த ஆஸ்திரேலியருக்கு அடித்த ஜாக்பாட் - என்ன கிடைத்தது தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது

ஒரு மலிவு விலை மெட்டல் டிடெக்டருடன் தங்கத்தை தேடி அலைந்தவருக்கு அடித்தது ஜாக்பாட். 4.6 கிலோ எடையுள்ள தங்கப் பாறையை அவர் கண்டுபிடித்துள்ளார். இதன் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய்.

1800-களில் ஆஸ்திரேலியாவின் தங்க வேட்டையின் மையமாக இருந்த விக்டோரியாவின் தங்க வயல்களில் தேடிக் கொண்டிருந்தபோது அவருக்கு இந்தத் தங்கப்பாறை கிடைத்தது. அவர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை.

“எனது 43 ஆண்டுகால தங்க வேட்டை வாழ்க்கையில் இது தான் மிகப்பெரியது” என்று கூறினார் அவரிடமிருந்து தங்கப் பாறையை மதிப்பிட்டு வாங்கிய டேரன் கம்ப் என்பவர்.

"இது வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் பொக்கிஷம்" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: