வெள்ளத்தில் முழ்கிய பெரியார் நினைவு சமத்துவபுரம் - மக்களின் நிலை என்ன?

வெள்ளத்தில் முழ்கிய பெரியார் நினைவு சமத்துவபுரம் - மக்களின் நிலை என்ன?
பிரசுரிக்கப்பட்டது

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த அதிகன மழை மற்றும் வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டம் முதல் திருச்செந்தூர் வரை தாமிரபரணி கரையோரம் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நீரில் மூழ்கியது.

இதில் திருச்செந்தூர் சாலையில் நாவலெட்சுமிபுரத்தில் இருக்கும் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள நூறு வீட்டில் இருந்த பொருட்கள், கால்நடைகள் என அனைத்தையும் வெள்ளம் அடித்துச் சென்றது.

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் குளம், ஆற்றின் கரைகளில் ஒரே நேரத்தில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் கழுத்தளவு சூழ்ந்த வெள்ளத்தில் இருந்து மீண்ட மக்கள், தங்கள் துயரத்தை பிபிசியிடம் பகிர்ந்துள்ளனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)