ஜி-7 உச்சி மாநாட்டில் மோதி - டிரம்ப் சந்திப்பு

ஜி-7 உச்சி மாநாட்டில் மோதி - டிரம்ப் சந்திப்பு
பிரசுரிக்கப்பட்டது

52வது ஜி-7 உச்சி மாநாட்டுக்காக உலகத் தலைவர்கள் பிரான்ஸ் நாட்டின் எவியான நகரில் ஒன்று கூடினர். திங்கள் கிழமை தொடங்கிய இந்த மாநாடு புதன்கிழமை வரை நடைபெறுகிறது.

இந்த மாநாட்டுக்கு பிரதமர் மோதி விருந்தினராக அழைக்கப்பட்ட நிலையில் அவர் பங்கேற்றார். 16 மாதங்களுக்குப் பிறகு இந்திய பிரதமர் மோதி அமெரிக்க அதிபர் டிரம்பை இந்நிகழ்வில் சந்தித்தார். நிகழ்வில் பங்கேற்ற உலகத் தலைவர்கள் பின்னர் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

ஜி-7 என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலகின் ஏழு முக்கிய வளர்ந்த பொருளாதார நாடுகளின் குழுவாகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு