நிருபரின் கேள்விக்கு புதின் கொடுத்த ரியாக்‌ஷன்

நிருபரின் கேள்விக்கு புதின் கொடுத்த ரியாக்‌ஷன்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் யுக்ரேன் போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்தாமலே அலாஸ்காவிலிருந்து கிளம்பினர்.

மூன்று மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். ஆனால் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை.

நிருபர்: புதின் அவர்களே, நீங்கள் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டீர்களா? இனி பொதுமக்களை கொல்ல மாட்டேன் என உறுதியளிப்பீர்களா? அதிபர் டிரம்ப் ஏன் உங்கள் வார்த்தைகளை இப்போது நம்ப வேண்டும்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு இரு தலைவர்களும் பதில் சொல்லவில்லை என்றாலும், புதின் கேள்விகளுக்கு வார்த்தைகளால் அல்லாது, உடல்மொழியால் சொன்ன பதில்கள் இவை.