You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மதம் மாறிய குடும்பங்களை ஒதுக்கி வைத்த மீனவ கிராமம் - பூம்புகாரில் என்ன நடக்கிறது?
பூம்புகார் மீனவ கிராமத்தில் உள்ள ஏழு குடும்பத்தினர் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுவதால், பல ஆண்டுகளாக அந்த ஊரின் மீனவர் நிர்வாகம் அந்தக் குடும்பங்களை ஒதுக்கி வைத்துள்ளது.
ஊர் கட்டுப்பாட்டை ஏற்காவிட்டால் அவர்களோடு உறவாட முடியாது என்கிறார்கள் கிராம நிர்வாகத்தினர். என்ன நடக்கிறது?
சிலப்பதிகாரம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் பலவற்றில் இடம்பெற்ற நகரம் காவிரி பூம்பட்டினம். முற்காலச் சோழர்களின் முக்கியமான துறைமுகமாகவும் இருந்த நகரம்.
தற்போது பூம்புகார் என்ற பெயரில் சிறுநகரமாக இருக்கும் இந்தப் பகுதி, மிக சிக்கலான ஒரு காரணத்திற்காக செய்திகளில் அடிபட ஆரம்பித்துள்ளது.
பூம்புகார் மீனவ கிராமத்தில், கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறார்கள் என்ற காரணத்தால் 7 குடும்பங்களை அந்த மீனவ கிராமத்தின் நிர்வாகம் ஒதுக்கி வைத்திருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்