You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெரு நாட்டில் 1000 ஆண்டு பழமையான மம்மி கண்டுபிடிப்பு
பெரு நாட்டில் 1000 ஆண்டு பழமையான மம்மி கண்டுபிடிப்பு
பிரசுரிக்கப்பட்டது
பெரு நாட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெரு தலைநகர் லிமாவில், எரிவாயு குழாய் பணியின்போது தொழிலாளர்கள் மம்மியைக் கண்டுபிடித்ததாக தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மம்மி ஒரு துணியில் சுற்றப்பட்டு, கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்தன என்றும் இந்த மம்மியுடன் சில பாத்திரங்களும் காணப்பட்டன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரமான லிமாவில் 500க்கும் மேற்பட்ட தொல்லியல் தளங்கள் உள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு