You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகளிர் உரிமைத் தொகை பெண்களை வறுமையிலிருந்து காப்பாற்றும் - ஜெயரஞ்சன்
தமிழ்நாடு அரசின் 'மகளிர் உரிமைத் தொகை' திட்டம் பெண்களின் வாழ்வை வறுமையிலிருந்து காப்பாற்றும் என மாநில திட்டக்கமிஷ்ன துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார். ஐரோப்பா, ஆப்பிரிக்காவில், அடிப்படை வருமானம் வழங்குவதற்காக பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அடிப்படை வருமானம் என்றில்லை என்றாலும், மாதா மாதம் ஒரு தொகை உறுதியாக கிடைக்கும் வண்ணம் ஒரு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் இத்திட்டம் தொடங்கப்பட்டதாக ஜெயரஞ்சன் தெரிவிக்கிறார். வறுமையில் இருப்பவர்கள் சடசடவென உயர்வதில்லை. ஏதேனும் ஒரு சிறிய தடங்கல் கூட அவர்களை மீண்டும் பின்னுக்கு தள்ளி விடும். அது போன்ற சூழலில் இந்த தொகை உதவியாக இருக்கும். உதாரணமாக வீட்டு வேலை செய்யும் பெண்கள், ஒரு வீட்டில் வேலை பார்ப்பதை நிறுத்தி விட்டால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சிறிய தொகை கிடைக்காது. இது போன்ற விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்