காணொளி: உதகையில் இரை தேடி வீட்டு வாசலுக்கே வந்த சிறுத்தை
காணொளி: உதகையில் இரை தேடி வீட்டு வாசலுக்கே வந்த சிறுத்தை
பிரசுரிக்கப்பட்டது
நீலகிரி மாவட்டம் சிறுத்தை நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. உதகை உட்பட நீலகிரியின் பல பகுதிகளிலும் குடியிருப்புகள் பெருகி வருவதாலும் காட்டுப் பகுதிகளில் உணவு அருகி வருவதாலும் சிறுத்தைகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன.
இதனால் சிறுத்தை - மனித மோதலும் அதிகரித்து வருகிறது. இரை தேடி மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வரும் சிறுத்தைகள் வளர்ப்பு பிராணிகளை தூக்கிச் செல்கின்றன. அவ்வாறு உதகை அருகே வீட்டின் வளாகத்துக்குள் சிறுத்தை நுழைந்தது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. பின் சிறுத்தை அங்கிருந்து வெளியேறி சாலையில் நடந்து சென்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



