காணொளி: ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றுமா இந்திய அணி?

காணொளிக் குறிப்பு, மகளிர் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றுமா இந்திய அணி?
காணொளி: ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றுமா இந்திய அணி?
பிரசுரிக்கப்பட்டது

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடருக்குத் தயாராகி வரும் இந்திய அணி, இதில் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஒருநாள் உலகக் கோப்பை வெற்றியைத் தொடர்ந்து, இந்த அணியின் மீதான எதிர்பார்ப்புகள் முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளன.

அந்த வெற்றி, அணியை வெறும் போட்டியாளர்களாக இருந்த நிலையிலிருந்து சாம்பியன்களாக உயர்த்தியுள்ளது. அதேவேளையில், இது கூடுதல் கவனத்தையும் அழுத்தத்தையும் அவர்கள் மீது சுமத்தியுள்ளது. மகளிர் கிரிக்கெட்டில் மிக வலிமையான அணிகளில் ஒன்றாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக்கொண்ட போதிலும், மகளிர் டி20 உலகக் கோப்பை என்ற முக்கிய பட்டம் மட்டும் இன்னும் அவர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு