You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலியல் வல்லுறவின் மூலம் பிறந்த குழந்தைகள் தற்போது எப்படி இருக்கிறார்கள்?
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில், பாலியல் வல்லுறவின் மூலம் பிறந்த குழந்தைகள், அத்தகைய குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரும் விரைவில் அரசாங்காத்தால் அங்கீகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிபிசியின் இந்த ஆவணத்தில், பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட தாய்க்கு பிறந்த குழந்தைகள் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். அதுமட்டுமல்லாமல், தாங்கள் பாதிக்கப்பட்ட விஷயம் ஒன்றின் மூலமாக அவர்கள் தங்களது வாழ்க்கையை வரையறுக்க விரும்பவில்லை என்பது குறித்தும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனை பொறுத்தவரை பாலியல் வல்லுறவினால் எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்பதை துல்லியமாகச் சொல்ல முடியாது. ஆனால் துர்ஹாம் பல்கலைக்கழகமும், பெண்கள் நீதிக்கான மையமும் இணைந்து 2021ஆம் ஆண்டில் மட்டும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 3,300 பெண்கள் பாலியல் வல்லுறவினால் கர்ப்பம் அடைந்துள்ளனர் என்று கூறுகின்றன.
தற்போது வரவுள்ள சட்ட வரைவின் மூலம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பாலியல் வல்லுறவால் பிறந்த குழந்தைகளை அதிகார்பபூர்வமாக குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறமுடியும் என அரசு தெரிவிக்கிறது. இதன் மூலம் அவர்கள், தெரபி, ஆலோசனைகள் போன்ற வசதிகளையும், அவர்கள் வழக்கு தொடர்பான தகவல்களையும் பெற முடியும் என அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர். மது, போதைப் பழக்கம், கல்வி மற்றும் வீடு வாங்கும் சேவைகளில் அவர்களுக்கு அதிகம் சலுகை கிடைக்கும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்