திருப்பத்தூர்: வனத்துறை அதிகாரிகளுக்கு 11 மணி நேரம் போக்கு காட்டிய சிறுத்தை - காணொளி

திருப்பத்தூர்: வனத்துறை அதிகாரிகளுக்கு 11 மணி நேரம் போக்கு காட்டிய சிறுத்தை - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

திருப்பத்தூரில் ஒரு வீட்டிற்குள் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக ஜூன் 14-ஆம் தேதி நண்பகலில் தகவல் கிடைத்து வனத்துறை அங்கு செல்வதற்குள், சிறுத்தை அருகில் உள்ள தனியார் பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது. பின்னர், அதையொட்டியுள்ள கார் பார்க்கிங் பகுதிக்குள் நுழைந்தது.

அப்போது அங்கிருந்த 5 பேர் சிறுத்தையிடம் இருந்து தப்ப 2 கார்களுக்குள் தஞ்சம் புகுந்தனர். அருகேயுள்ள சில தனியார் பள்ளிகளில் வகுப்புகள் முடிந்த பின்னரும் பாதுகாப்பு கருதி மாணவ, மாணவியர் வீட்டிற்கு அனுப்பப்படாமல் பள்ளியிலேயே பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.

கார் பார்க்கிங் அமைந்துள்ள இடம் மிகவும் நெருக்கடியான ஒன்றாக இருந்ததால் சிறுத்தையை பிடிப்பது வனத்துறையினருக்கு சவாலாக இருந்தது. அங்கும் இங்கும் போக்கு காட்டிய சிறுத்தையை சுமார் 11 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு ஜூன் 15-ஆம் தேதியான இன்று அதிகாலை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

இந்த சிறுத்தையை காப்புக்காட்டிற்குள் விடப்படும் என்று வேலூர் மண்டல வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)