மணிப்பூரில் வன்முறை காரணமாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு - என்ன நடக்கிறது?

மணிப்பூரில் வன்முறை காரணமாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு - என்ன நடக்கிறது?
பிரசுரிக்கப்பட்டது

மணிப்பூரில் ஆல் ட்ரைபல் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் (அனைத்து பழங்குடியினர் மாணவர் சங்கம்) நடத்திய பொது பேரணி வன்முறையாக மாறியதை அடுத்து, வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டவுடன் சுடும் உத்தரவை நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் வைக்க ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாநில காவல்துறையுடன் இணைந்து பல இடங்களில் வன்முறையை கட்டுப்படுத்தியதாகவும், கொடி அணிவகுப்புகளை நடத்தியதாகவும் ராணுவம் முன்னதாக கூறியிருந்தது. மாநிலம் முழுவதும் புதன்கிழமை முதல் ஐந்து நாட்களுக்கு மொபைல் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: