‘ஒருநாள் கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த இன்னிங்ஸ்’ – மேக்ஸ்வெல்லுக்குக் குவியும் பாராட்டு – வீடியோ
அற்புதங்கள் அரிதானவை. வலிமையுடனும் புத்திசாலித்தனத்துடனும் திறனை வெளிப்படுத்தும் விளையாட்டுத் துறையில் அற்புதங்கள் ஆகக் குறைவு.
ஆனால் அதிசயங்களை நம்புபவர்கள், மும்பை வான்கடே மைதானத்தில் க்ளென் மேக்ஸ்வெல் வடிவத்தில் நேற்று (நவம்பர் 7) ஒரு அற்புதத்தைக் கண்டார்கள்.
கிளென் மேக்ஸ்வெல்லின் இன்னிங்ஸ், ஒரு வீரர் தனது தைரியத்தால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டியது. போட்டியை முடித்த நான்கு பந்துகளில், மேக்ஸ்வெல் இரண்டு சிக்ஸர்கள், பின்னர் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார்.
பல சிரமங்களைக் கடந்து இரட்டை சதம் அடித்திருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல்லை உலகம் முழுதும் இருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பாராட்டியுள்ளனர்.
இது ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்ல, கிரிக்கெட் களத்திலேயே மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.

பட மூலாதாரம், Reuters
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



