மகாராஷ்டிராவில் தேர்வு எழுத பாராகிளைடிங் மூலம் சென்ற மாணவர்
மகாராஷ்டிராவின் பஞ்ச்கணியை சேர்ந்த மாணவர் ஒருவர், அவரது தேர்வுக்கு ஒரு வித்தியாசமான முறையில் சென்றார். கார் மூலமோ பைக் மூலமோ அல்ல, பாராகிளைடிங் மூலம்.
தேர்வுத் தேதியில் ஏற்பட்ட குழப்பத்தால் மகாராஷ்டிராவின் பஞ்ச்கணியை சேர்ந்த சமர்த் மஹங்கடேவுக்கு தேர்வுக்குச் செல்ல சில நிமிடங்களே இருந்தன.
அவர் இருப்பது மலைப்பகுதி. அங்கே போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால் நேரத்துக்குச் செல்ல முடியுமா என்று பயத்தில் இருந்த அவருக்கு லிப்ட் வழங்க முன்வந்தவர் ஒரு பாராகிளைடர்.
"எனக்கு நம்பிக்கையில்லை. பயமாக இருந்தது. ஆனால், தேர்வுக்குக் கண்டிப்பாக போய் ஆக வேண்டும். அதனால், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பயணிக்க முடிவெடுத்தேன்" என்கிறார் சமர்த்.
இந்தியாவின் மேற்குப்பகுதியில் உள்ள சயாத்ரி மலைகளில் உள்ள பஞ்ச்கணி பிரபல சுற்றுலாத் தளம் என்பதால் வார இறுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமிருக்கும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



