திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்திற்கு விஜய் நேரில் ஆறுதல்
திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்திற்கு விஜய் நேரில் ஆறுதல்
பிரசுரிக்கப்பட்டது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் போலிஸ் விசாரணையின்போது மரணமடைந்த கோவில் காவலாளி அஜித்குமாரின் வீட்டிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருகை புரிந்தார்.
அஜித்குமாரின் குடும்பத்தினரைச் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த விஜய் ரூ.2 லட்சம் நிதி வழங்கினார்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து தவெக சார்பில் ஜூலை 3ம் தேதியன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



