யுவராஜ் சிங்கின் முதல் இன்னிங்ஸில் என்ன நடந்தது தெரியுமா?

காணொளிக் குறிப்பு, யுவராஜ் சிங்கின் முதல் இன்னிங்ஸில் என்ன நடந்தது தெரியுமா?
யுவராஜ் சிங்கின் முதல் இன்னிங்ஸில் என்ன நடந்தது தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது

ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் - பேட்டிங்கில் நடுவரிசையில் களமிறங்க வேண்டும், தேவைப்பட்டால் ஆட்டத்தில் பந்து வீச வேண்டும், அற்புதமாக ஃபீல்டிங் செய்ய வேண்டும், ஃபினிஷராகவும் இருக்க வேண்டும்; அது மட்டுமல்ல இடதுகை பேட்ஸ்மேனாகவும் இருக்க வேண்டும். இப்படி பரிணமிப்பவரை ஆல் ரவுண்டர் என கிரிக்கெட் உலகம் அழைக்கும். அப்படி ஒரு 'ஆல்ரவுண்டரை' இந்தியா தேடியது.

தேடிக்கொண்டே இருக்கிறது. இனி வரும் காலங்களிலும் தேடக்கூடும். இந்தியாவுக்குத் தேவையான அந்த 'அற்புத ஆல்ரவுண்டர்' பணியை சில வீரர்கள் சில காலம் செய்திருக்கிறார்கள்.

யுவராஜ் சிங்

அதில் குறிப்பிடத்தக்கவர் - இந்தியாவின் உலக கோப்பை கனவுகள் நனவாக துருப்புச் சீட்டாக இருந்த யுவராஜ் சிங்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: