You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியன் 1 படத்தின் கதை என்ன?
இந்தியன் 2 திரைப்படம் திரையரங்குகளில் ஜூலை 12ஆம் தேதி வெளியாகிறது. முதல் பாகம் வெளியாகி 28 ஆண்டுகளுக்கு பின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ள நிலையில், முதல் பாகம் வெளியானபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்தியன் திரைப்படம்.
கடந்த 1996ஆம் ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் 'இந்தியன்' படத்தின் விளம்பரம் வெளியானபோது, சினிமா ரசிகர்களிடம் ஒருவித பரப்பரப்பு ஏற்பட்டது. மாறுபட்ட திரைக்கதையை கொண்ட குருதிப்புயல் படத்தை தந்திருந்த கமல், அடுத்ததாக இயக்குநர் ஷங்கருடன் கைகோர்த்ததும் அதற்கு ஒரு காரணம்.
ஜென்டில்மேன், காதலன் படங்களை இயக்கிய ஷங்கருக்கு மூன்றாவது படத்திலேயே கமலுடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு பின் ஒரு சுவாரஸ்யமும் உண்டு. இந்தியன் படத்தின் கதை முதலில் நடிகர் ரஜினிகாந்துக்காக உருவாக்கப்பட்டது என ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த இயக்குநர் வசந்தபாலன் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)