You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செட்டித் தோட்டம்: இயல்புநிலை திரும்பிவிட்டதாகக் கூறும் அமைச்சர் - உண்மை நிலை என்ன? - காணொளி
கரை புரண்டு ஓடும் அடையாற்றங்கரையோரம் அமைந்துள்ளது செட்டித்தோட்டம். சென்னை சைதாப்பேட்டையில் அமைந்திருக்கும் இந்தப் பகுதி மிக்ஜாம் புயலால் சேறும் சகதியுமாக மாறியிருக்கிறது.
கழிவு நீரால் வீடுகளும் வீதிகளும் அலங்கோலமாக காட்சியளித்தன. அங்குள்ள நிலையை அறிய பிபிசி தமிழ் நேரடியாக கள ஆய்வு செய்தது.
மிக்ஜாம் புயலின்போது அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரத்தில் வெள்ள நீர் 10 அடி உயரம் வரை சென்றது.
கரையோரத்தில் இருக்கும் செட்டித்தோட்டத்தில் தரைதளத்தை மூழ்கடித்துச் சென்றது வெள்ளம். அப்போது பாதுகாப்பு கருதி நிவாரண முகாம்களில் தங்கியிருந்த மக்கள், புதன்கிழமை வெள்ளநீர் வடிந்ததையொட்டி தங்கள் குடியிருப்புகளுக்கு திரும்பினர்.
உடைமைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் பயன்படுத்த முடியாத அளவுக்கு இருந்தது. காலை பொழுதில், வெறுங்கைகளால் சேற்றையும் அடர்த்தியான கழிவுகளையும் அகற்றி, கழிவுநீர் தொட்டியையும் இப்பகுதி மக்கள் சீர் செய்து செய்தனர்.
பயன்படுத்த முடியாத பொருட்களை வீடுகளில் இருந்து அகற்றி தெரு முனையில் குவித்தனர். வீட்டுக்குள் தேங்கிய கழிவுநீரை பாத்திரத்தைக் கொண்டு வெளியேற்றிக் கொண்டிருந்த ரமேஷை சந்தித்துப் பேசினோம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)