You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஸா: உறவினர்களின் உடல்களைத் தேடி கான் யூனிஸ் பகுதிக்குள் வரும் மக்கள்
காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால், அங்கிருந்து வெளியேறிய மக்கள், தங்கள் உறவினர்களைத் தேடி மீண்டும் அப்பகுதிக்குள் வருகிறார்கள்.
அவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள் எனத் தெரிந்தும், அவர்களது உடல்களை தேடியே மக்கள் இங்கு வருகிறார்கள்.
“எனது மகன் உயிரோடு இருக்க மாட்டான் எனத் தெரியும். ஆனால் அவன் உடலாவது எனக்கு வேண்டும். அவனை என்னிடம் கொண்டு வாருங்கள்” என்கிறார் காஸாவைச் சேர்ந்த ரீம் ஜெய்தான்.
இவரது மகன், 23 வயதான நபீல் ஜனவரி மாதம் இஸ்ரேலியத் தாக்குதலால் கொல்லப்பட்டார்.
“பலரையும் கட்டிப்போட்டு, துன்புறுத்தி கொன்றிருக்கிறார்கள்” என இஸ்ரேலிய படைகள் மீது குற்றம் சாட்டுகிறார் ரீம் ஜெய்தான். ஹமாஸும் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. ஆனால் இஸ்ரேலிய படைகள் இதை மறுத்துள்ளன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)