இந்தோனீசியா நிலநடுக்கம்: மூன்று நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட 5 வயது சிறுவன்

காணொளிக் குறிப்பு, இந்தோனீசியா நிலநடுக்கம்: மூன்று நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட 5 வயது சிறுவன்
இந்தோனீசியா நிலநடுக்கம்: மூன்று நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட 5 வயது சிறுவன்
பிரசுரிக்கப்பட்டது

இந்தோனீசிய நிலநடுக்கத்தால் உருக்குலைந்த கட்டட இடுபாடுகளில் சிக்கிய 5 வயது சிறுவன் 3 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட பரபரப்புக் காட்சி இது.

இந்தோனீசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கிய நூற்றுக்கணக்கானோரில் அஸ்கார் என்கிற 5 வயது சிறுவனும் ஒருவர். ராவா சினா என்கிற கிராமத்தில் 3வது நாளாகத் தொடர்ந்த மீட்புப் பணியின்போது இந்தச் சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.

கண்டெடுக்கப்பட்டபோது சுயநினைவுடனும் அமைதியாகவும் இருந்த சிறுவன், மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இந்தோனீசியா நிலநடுக்கம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: