You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சூரியனை ஆராய எல்1 புள்ளியை அடைந்தது ஆதித்யா - அங்கே என்ன செய்யும்?
இஸ்ரோவால் ஏவப்பட்ட ஆதித்யா எல்1 அதன் குறிப்பிட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்துளளது. இந்த வெற்றியின் மூலம் சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்கு ஆய்வுகளை அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
ஆதித்யா எல்1 பூஜ்ஜிய சுற்றுப்பாதையை அடைந்தவுடன், அது தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத், "எங்கள் தரைக் கட்டுப்பாட்டு நிலையம் தனது பணியை சிறப்பாகச் செய்து முடித்துள்ளது. அனைத்து கருவிகளும் நன்றாக வேலை செய்தன. கடினமான கணிதக் கணக்கீடுகளும் கூட மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன" என்றார்.
" 100 கிலோவுக்கும் அதிகமான எரிபொருளைக் கொண்டிருப்பதால், இந்த திட்டத்தின் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கக் கூடும் என்று அவர் கூறினார். இந்த பயணத்திற்குப் பிறகு, வீனஸ், செவ்வாய், வியாழன், நெப்டியூன் மற்றும் புளூட்டோ போன்ற கிரகங்களுக்கும் விண்கலங்களை இஸ்ரோ அனுப்பும் என்று சோம்நாத் கூறினார்.
முழு விவரம் காணொளியில்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)