இஸ்ரேலில் கார் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவினர் துப்பாக்கிச் சூடு - வீடியோ வெளியீடு

இஸ்ரேலில் கார் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவினர் துப்பாக்கிச் சூடு - வீடியோ வெளியீடு
பிரசுரிக்கப்பட்டது

அக்டோபர் 7ம் தேதி, இஸ்ரேலில் கார் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் காட்சி இது.

காரின் முன்பக்கம் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளதாகக் கூறி, இதனை இஸ்ரேல் அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

ஹமாஸின் துப்பாக்கிச் சூட்டில், காரில் பயணித்த 2 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.

ஆயுதக்குழுவைச் சேர்ந்த ஒருவரின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவிலும் சில காட்சிகள் பதிவாகியுள்ளன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)