நீலகிரியில் ஆ.ராசா - எல்.முருகன் இடையே கடும் போட்டி - அதிமுக வேட்பாளர் என்ன செய்கிறார்?

நீலகிரியில் ஆ.ராசா - எல்.முருகன் இடையே கடும் போட்டி - அதிமுக வேட்பாளர் என்ன செய்கிறார்?
பிரசுரிக்கப்பட்டது

நீலகிரியில் திமுக ஆ.ராசா , பாஜக எல். முருகன், அதிமுக டி. லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் சுயேச்சைகளும் போட்டியிடுகின்றனர்.

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் பவானிசாகர் (தனி), உதகமண்டலம், கூடலூர் (தனி), குன்னூர், மேட்டுப்பாளையம், அவினாசி (தனி) ஆகிய ஆறு தொகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன.

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை, எட்டு முறை காங்கிரஸ் வெற்றிபெற்ற தொகுதி இது. தி.மு.க. மூன்று முறையும் அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகியவை தலா இரண்டு முறையும் வெற்றிபெற்ற தொகுதி இது.

இதில் இந்த முறை யார் வெற்றி பெறப்போகிறார், தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)