காசாவின் அடிப்படை கட்டமைப்புகளை தகர்க்கும் இஸ்ரேல் - காணொளி

காணொளிக் குறிப்பு, ஹமாஸ் தாக்குதலுக்கு எதிர்வினையாக காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது
காசாவின் அடிப்படை கட்டமைப்புகளை தகர்க்கும் இஸ்ரேல் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

ஹமாஸ் தாக்குதலுக்கு எதிர்வினையாக காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் காசாவில் உள்ள அடிப்படை கட்டமைப்புகளை இஸ்ரேல் தகர்த்து வருகிறது.

காசாவில் உள்ள இஸ்லாமிய பல்கலைகழகம் ஹமாஸ் குழுவினரின் பயிற்சி தளமாக இருந்ததாக குற்றம் சாட்டும் இஸ்ரேல் அந்த கட்டடத்தை தரைமட்டமாக்கியது.

தென்மேற்குச் சுற்றுப்புறத்தின் உள்கட்டமைப்பு கடுமையாக சேதமடைந்திருந்தது மற்றும் அப்பகுதிக்குச் செல்லும் பெரும்பாலான சாலைகள் துண்டிக்கப்பட்டன.

அப்பகுதி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டதுபோல இருந்தது. ஆங்காங்கே இடிபாடுகளும், உடைந்த கண்ணாடிகளும், துண்டிக்கப்பட்ட கம்பிகளும் கிடந்தன.

காசாவின் அடிப்படை கட்டமைப்புகளைெ தகர்க்கும் இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: