You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்: சிங்கப்பூர் முதலிடம் - இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
சிங்கப்பூர் பாஸ்போர்ட் தான் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட். சரி, அப்படி சொல்வது யார்?
ஹென்லெ பாஸ்போர்ட் இண்டெக்ஸின் ( Henley Passport Index) சமீபத்திய தரவுகள் தான் அவ்வாறு சொல்கின்றன.
விமானத் துறையில் இருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்து, விசா இல்லாமல் அதிக நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு செல்ல எந்த பாஸ்போர்ட் உதவும் என்பதை வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் 195 நாடுகளின் எல்லைகளை உங்களால் கடக்க முடியும். இரண்டாவது இடத்தில் ஃபிரான்ஸ், அதற்கு அடுத்த இடங்களில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் நாடுகள் உள்ளன.
2018க்கு பின் முதன்முறையாக ஜப்பான் இந்தப் பட்டியலில் முதலிடம் பிடிக்கவில்லை.
இந்த பட்டியலில் இந்தியா 82வது இடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட் மூலம் 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.
இந்த பட்டியலில் கடைசி இடம் பிடித்திருப்பது ஆப்கானிஸ்தான். அந்நாட்டின் பாஸ்போர்ட் மூலம் 26 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் செல்ல முடியும்.
வலிமையான பாஸ்போர்ட் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி, வணிக பயணத்தை எளிதாக்கி, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் என இந்த ஆய்வை நடத்தியவர்கள் சொல்கிறார்கள்.
எனவே, இது வெறும் விடுமுறை கொண்டாட்டம் தொடர்பானது மட்டும் இல்லை.
முழு விவரம் காணொளியில்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)