You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி: அடையாளம் தெரியாத உடல்களுக்கு இறுதி சடங்குகளை செய்யும் பெண்
பூஜா ஷர்மா, டெல்லியில் உரிமை கோரப்படாத அல்லது அடையாளம் தெரியாத உடல்களுக்கு இறுதி சடங்குகளை செய்கிறார். இதுவரை 5,000க்கும் மேற்பட்ட உரிமை கோரப்படாத சடலங்களுக்கு இறுதி சடங்குகள் செய்துள்ளதாகக் கூறுகிறார் பூஜா.
"13 மார்ச் 2022 அன்று, என் மூத்த அண்ணன் காலமானார். அந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல், என் அப்பா கோமா நிலைக்கு சென்றார். இறுதிச் சடங்கை செய்ய குடும்பத்தில் ஆண்கள் யாரும் இல்லை. எனவே அண்ணனின் இறுதி சடங்குக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன்." என்று கூறுகிறார் பூஜா.
தனக்கு ஏற்பட்ட துயர அனுபவத்தாலும், பிறர் இதை அனுபவிக்கக் கூடாது என்பதற்காகவும் இந்த சேவையைத் தொடங்கினார் பூஜா.
முதலில், உரிமை கோரப்படாத உடல்களுக்கு இறுதி சடங்குகள் செய்ய தொடங்கியபோது, அண்டை வீட்டார் தன்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்கள் என்று கூறுகிறார் பூஜா.
இந்து மதத்தில், இறுதி சடங்குகள் செய்வது ஆண்களின் வேலை என்பதால் பூஜாவுக்கு எதிர்ப்புகள் எழுந்தன. ஆனாலும் பூஜா இந்த சேவையை தொடர்ந்து செய்கிறார்.
"பெண்கள் இறுதி சடங்கு செய்யக்கூடாது என எந்த மத நூலும் கூறவில்லை அல்லது தடுக்கவில்லை. வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மத மக்களுக்கும் சேவை செய்ய முடிவது நிம்மதியையும் மன நிறைவையும் அளிக்கிறது." என்கிறார் பூஜா.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)