You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இமயமலைப் பருவமழை ஏன் மிக ஆபத்தானதாக மாறுகிறது?
கடந்த சில ஆண்டுகளாக இமயமலைப் பிராந்தியம் பல துயரங்களைச் சந்தித்து வருகிறது.
காலநிலை மாற்றம் மழைப்பொழிவு காலத்தை மாற்றுகிறது, மேலும் நாடு முழுவதும் நீண்ட வறண்ட காலங்களையும் திடீர் கனமழை நிகழ்வுகளையும் ஏற்படுத்துகிறது என்று காலநிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புனே இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தைச் (IITM) சேர்ந்த காலநிலை ஆய்வாளர் டாக்டர் ராக்ஸி மேத்யூ கோலின் கூற்றுப்படி, 1950 மற்றும் ஜூன் 2025 க்கு இடையில், இந்தியாவில் மொத்தம் 325 வெள்ளப்பெருக்குகள் நிகழ்ந்துள்ளன. இதில் 923 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 19 மில்லியன் மக்கள் வீடற்றவர்களாக மாறியுள்ளனர், 81,000 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.
மேகவெடிப்பு (ஒரு மணி நேரத்தில் 100 மிமீ மழைப்பொழிவு) போன்ற தீவிர நிகழ்வுகள் இப்போது அடிக்கடி நிகழ்கின்றன. இத்தகைய நிகழ்வுகளுக்கு காரணம் என்ன? என்பதை காணொளியில் காணலாம்.