காணொளி: மெக்சிகோ- தென் கொரியா இடையிலான 'கால்பந்து நட்பு'

காணொளி: மெக்சிகோ- தென் கொரியா இடையிலான 'கால்பந்து நட்பு'
பிரசுரிக்கப்பட்டது

ஃபிஃபா உலகக் கோப்பையை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில், தென் கொரிய ரசிகர்கள் உள்ளூர் மக்களுடன் கொண்டாடும் காணொளிகள் வைரலாகப் பரவி வருகின்றன.

12,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தால் பிரிக்கப்பட்டிருந்தாலும் இரு நாடுகளும் எதிர்பாராத ஒரு பிணைப்பை உருவாக்கியுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு ரஷ்யாவில் நடந்த 2018 உலகக் கோப்பையின் போது தொடங்கியது.

ஜெர்மனிக்கு எதிரான தென் கொரியாவின் 2-0 வெற்றியானது, நாக் அவுட் சுற்றின் கடைசி 16 அணிகளுக்குள் மெக்சிகோ தகுதி பெற உதவியது.

மெக்சிகோவில், ரசிகர்கள் அதைத் தங்களின் சொந்த வெற்றி போலக் கொண்டாடினர்.

அன்று முதல், இரு நாடுகளுக்கும் இடையே கால்பந்தாட்டத்தை தாண்டிய நட்பு வளர்ந்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வணிக உறவுகள் வளர்ந்து வருவதோடு, கொரிய கலாசாரமும் மெக்சிகோவில் அதிகளவில் பிரபலமடைந்து வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு