இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தடையை மீறி வெங்காயம் ஏற்றுமதி செய்வது ஏன்? - காணொளி

இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தடையை மீறி வெங்காயம் ஏற்றுமதி செய்வது ஏன்? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

இந்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதித்து நீண்ட காலமான நிலையிலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற சில நாடுகளுக்கு அரசின் அனுமதியுடன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போது, உலகளவில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. ஆனால், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயம் குறைந்த விலைக்கே அனுப்பப்படுவதால் விவசாயிகள், வியாபாரிகள் கோபமடைந்துள்ளனர்.

இந்திய விவசாயிகளுக்கு ஒரு கிலோ வெங்காயத்திற்கு ரூ.12 முதல் ரூ.15 வரை தரப்படுவதாகவும், அதே வெங்காயம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றடையும் போது, கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.

வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் அரசாங்கம் வெங்காயத்தை ஏன் ஏற்றுமதி செய்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)