சுனிதா வில்லியம்ஸ் பயணம்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்கலம் பிரிந்த காட்சி

சுனிதா வில்லியம்ஸ் பயணம்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்கலம் பிரிந்த காட்சி
பிரசுரிக்கப்பட்டது

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 286 நாட்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமியை நோக்கி திரும்பி வருகிறார். எட்டு நாள் பயணமாக கடந்த ஜூன் 5-ஆம் தேதி சென்ற அவர் எதிர்பாராத நிகழ்வுகளால் அங்கே மாதக்கணக்கில் தங்க நேரிட்டது.

புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சக பணியாளர்களான அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் சேர்ந்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புகின்றார்.

அவர்களுக்குப் பதிலாக, தற்போது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ-10 விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ள ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் அங்கு பணிகளைத் தொடர்வார்கள்.

நாசா ஏற்கனவே அறிவித்தபடி, இந்திய நேரப்படி இன்று காலை 10.35 மணிக்கு சுனிதா உள்ளிட்டோர் பயணிக்கும் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்தது.

ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் , புட்ச் வில்மோர், நிக் ஹாக் மற்றும் ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் தங்கள் பொருட்களுடன் இருக்கைகளில் தயாரான வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது. அதற்கு முன்னதாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்களுடன் உடன் பணிபுரிந்த மற்றும் புதிதாக இணைந்துள்ள வீரர்களுக்கு அவர்கள் விடை கொடுத்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு