காணொளி: நீரில் செத்து மிதந்த மீன்கள் - காரணம் என்ன?

காணொளி: நீரில் செத்து மிதந்த மீன்கள் - காரணம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

குஜராத்தின் கட்ச் பகுதியில், லட்சக்கணக்கான மீன்கள் நீரில் செத்து மிதக்கும் காணொளி வெளியாகியுள்ளது.

ராம்சார் பாதுகாக்கப்பட்ட நீர்நிலைக்கு அருகிலுள்ள சராய் அணையில் உள்ள இந்த மீன்கள் இறந்துள்ளன.

அணையில் நீர்மட்டம் குறைந்ததாலும், கடுமையான வெயில் காரணமாக நீரின் வெப்பநிலை அதிகரித்ததாலும், தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜன் அளவு குறைந்ததாலும் இந்த மீன்கள் இறந்துள்ளன என்று மேற்கு நகத்ரானாவின் வன அதிகாரியான வி.சி. மோதி கூறுகிறார்.

கோடைக்காலத்தின் பிற்பகுதியில் இயற்கையான செயல்முறையின் ஒரு பகுதியாகவே இது நடப்பதாகவும் இதில் சட்டவிரோதமானதோ அல்லது சந்தேகத்துக்குரியதோ எதுவுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு