காணொளி: நீரஜ் சோப்ராவை முந்தி தங்கம் வென்ற இலங்கை வீரர்

காணொளிக் குறிப்பு,
காணொளி: நீரஜ் சோப்ராவை முந்தி தங்கம் வென்ற இலங்கை வீரர்
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா, ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

இலங்கையின் ருமேஷ் பத்திரகே 89.75 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். நீரஜ் 85.83 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.

மற்றொரு இந்திய வீரரான யஷ்விர் சிங், தனது தனிப்பட்ட சிறந்த அளவாக 85.41 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த நட்சத்திர வீரரும், நீரஜின் போட்டியாளருமான அர்ஷத் நசீம் ஒன்பதாவது இடத்தையே பிடித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு