உடல் நலனுக்கு உகந்த எண்ணெய் எது? நம்மிடையே நிலவும் 3 தவறான கற்பிதங்கள்

காணொளிக் குறிப்பு, எந்த எண்ணெய் உடலுக்கு நல்லது? - 3 தவறான கருத்துகள்
உடல் நலனுக்கு உகந்த எண்ணெய் எது? நம்மிடையே நிலவும் 3 தவறான கற்பிதங்கள்
பிரசுரிக்கப்பட்டது

கடைகளில் பலவித எண்ணெய்கள் உள்ளன. ஆனால், உங்கள் உடலுக்கு எது நல்லது?

எந்தவொரு எண்ணெயும் உடல் நலனுக்கான தாரக மந்திரமாக கருத முடியாது என்கிறார்,

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேரா. நிதா ஃபரௌஹி.

3 தவறான கற்பிதங்களை விளக்குகிறார்.

1. சூரியகாந்தி, காய்கறி எண்ணெய் நல்லதல்ல:

இந்த எண்ணெய்கள் நல்லதல்ல என கூறமுடியாது. நிறைவுற்ற கொழுப்பு குறைவாக உள்ளது, மூளை நலனுக்கு இவை முக்கியமானவை.

2. ஆலிவ் எண்ணெய் மிகச் சிறந்தது:

இது குறைவான வெப்பநிலையில் உடைந்து நச்சுப் பொருட்களை வெளியிடும். சாலட், குளிர்ச்சியான உணவுகளில் பயன்படுத்தலாம். பொரிக்கசூரியகாந்தி, காய்கறி எண்ணெயை

பயன்படுத்தலாம்.

3. செயற்கை வெண்ணெய், வெண்ணெய் நல்லதல்ல:

செயற்கை வெண்ணெய் கொலஸ்டிராலை குறைக்க உதவும். வெண்ணெயை அவ்வப்போது

சேர்க்கலாம். ஆனால் சமைக்க, நிறைவுற்ற கொழுப்பு குறைவாக உள்ள எண்ணெய்

பயன்படுத்தலாம்.

ஒட்டுமொத்த உணவுமுறையை கருத்தில் கொள்வதே உடல் நலனுக்கு ஏற்றது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.