பறக்கும் விமானத்தில் சாகசம் செய்த டாம் குரூஸ்: அனுபவம் குறித்து பிபிசியிடம் பகிர்ந்தது என்ன?
மிஷன் இம்பாசிபிள்- The Final Reckoning படத்தில் விமானத்தில் சாகசம் செய்தது எப்படி என்ற தகவலை பிபிசியிடம் டாம் குரூஸ் பகிர்ந்துக்கொண்டார்.
''இது முழு உடலையும் கொண்டு மிகப்பெரிய எடையைத் தூக்குவது போன்றது. குறிப்பிட்ட கட்டத்தில், உங்கள் உடலால் நகர முடியாது. அதைத் தவிர்க்க வேறு வழி இல்லை. நீங்கள் நகர முடியாது. வெறும் மயக்கம் போன்றல்ல, களைத்துப் போயிருந்தேன். சுயநினைவு அற்ற நிலைக்கு சென்றது போல இல்லை, ஆனால் வேறு ஒரு நிலைக்குச் சென்றேன். பின், உடல் புத்துணர்ச்சி பெறவும் போதுமான ஊட்டம் பெறவும் தூங்கிவிட்டேன். நான் இறக்கையில் கடினமாக தொங்கினேன். மிக வேகமாக அது நடந்தது. அதன் வலு எப்படி இருக்கும் என்றால், கையையோ, முகத்தையோ மணிக்கு 145 மைல் வேகத்தில் செல்லும் காருக்கு வெளியே நீட்டி சுவாசிக்க முயற்சிப்பது போல இருக்கும். அதோடு வானத்தில் நகர முயற்சிக்க வேண்டும். விமானத்தைச் சுற்றி வர வேண்டும் அல்லது தொங்க வேண்டும்.'' என்கிறார் டாம் குரூஸ்.
மேலும் விவரங்கள் காணொளியில்
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



