திருவள்ளூரில் லாரி கவிழ்ந்து சாலையில் ஆறாக உடைந்து ஓடிய 2 லட்சம் முட்டைகள் - காணொளி
திருவள்ளூரில் லாரி கவிழ்ந்து சாலையில் ஆறாக உடைந்து ஓடிய 2 லட்சம் முட்டைகள் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
திருவள்ளூரில் முட்டை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் சுமார் 2 லட்சம் முட்டைகள் உடைந்து வீணாகின.
திருத்தணி அருகே அத்திமாஞ்சேரி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இந்த இந்த சம்பவம் நடந்துள்ளது.
முட்டைகள் உடைந்து சாலையில் ஓடிய காட்சி வெளியாகியுள்ளது.
உடையாமல் இருந்த முட்டைகள் மற்றும் பாதி உடைந்த முட்டைகளை பொதுமக்கள் பைகளில் அள்ளிச் சென்றனர்.
இரண்டு லட்சத்திற்கும் அதிகமான முட்டைகள் உடைந்து போனதாக முட்டை வண்டியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார் எதனால் முட்டை வண்டி கவிழ்ந்தது என்று பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



