You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பாஜக குறித்த விமர்சனத்தில் விஜய் தவறவிட்டது என்ன? - பத்திரிகையாளர் லட்சுமணன் விளக்கம்
மாநாட்டில் பேசிய விஜய், "1967, 1977ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதேபோன்று 2026ல் அப்படியொரு வரலாறு திரும்பப் போகிறது என்பதை உறுதியாக சொல்வதற்கான மாநாடு இது." என தெரிவித்தார்.
மேலும், ''எங்களின் நிலைப்பாட்டில் எந்த சமரசமும் இல்லை. ஒரே கொள்கை எதிரி பாஜக தான், அரசியல் எதிரி திமுக தான்.
ஒட்டுமொத்த மக்களின் சக்தி எங்களுடன் இருக்கிறது. உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் உறவுகள் நம்முடன் இருக்கும்போது பாசிச பாஜகவுடன் ஏன் மறைமுக கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும்? நாங்கள் என்ன மகா ஊழல் கட்சியா?
2026ல் இரண்டு பேருக்கு இடையேதான் போட்டி. ஒன்று டிவிகே, மற்றொன்று திமுக.'' என்றார்.
தவெக மாநாட்டில் விஜயின் பேச்சு, பாணி உள்ளிட்ட கேள்விகளுக்கு மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் இந்த காணொளியில் பதிலளிக்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு